பிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது- மும்பை ஹைகோர்ட்!-மீண்டும் சிக்கலில் சீனிவாசன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர் குந்த்ரா உள்ளிட்டோர் மீது கிரிக்கெட் பெட்டிங் புகார் கூறப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருந்தார் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே இருவர் குழுவை நியமித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக் குழு குருநாத் மெய்யப்பனும் குந்த்ராவும் நல்லவர்கள் எனக் கூறியது.
இது தொடர்பான வழக்கில் இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைத்தது சட்டவிரோதம் என்று கூறி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிய விசாரணைக் குழுவை அமைக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications