திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பள்ளி செயலருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ளது அன்னை மெட்ரிக் குலேசன் பள்ளி. இங்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு காலை 7 மணிக்கு சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. நேற்று நடந்த சிறப்பு வகுப்புக்கு மாணவி சுமதி (பெயர் மாற்றம்) தாமதமாக வந்துள்ளார்.
இதனை அறிந்த பள்ளியின் செயலாளர் கதிரேசன் (43) மாணவியை தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அப்போது, வகுப்புக்கு தாமதமாக வந்ததன் காரணத்தை கேட்டவாறு சுமதியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார் கதிரேசன்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சுமதி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆவேசமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி முதல்வர் லட்சுமியிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
அப்போது, உடன் இருந்த பள்ளி செயலாளர் கதிரேசன் மாணவி சுமதியை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அதிகரிக்கவே தகவல் அறிந்ததும் திருப்பூர் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, கதிரேசன் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.
இதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியே நடத்திய விசாரணையில் "கதிரேசன் தகாத முறையில் நடந்து கொள்வார் என்றும் அவர் மிரட்டியதால் நாங்கள் யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்தோம்" என்றும் மாணவிகள் அழுது கொண்டே கூறியுள்ளனர்.
இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும் கதிரேசனை சரமாரியாக அடித்து துவைத்தனர். உடனடியாக போலீசார் அவர்களிடம் இருந்து கதிரேசனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே, கதிரேசனை கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications