நன்றாக நடக்கும் என் அரசை கவிழ்க்க மத்திய அரசு சதி: மமதா பாய்ச்சல்

விரைவில் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாகவிருக்கிறது. தெலுங்கானா உருவான பிறகு ஆந்திராவுக்கும், அதற்கும் தலைநகரமாக ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு இருக்கும். இந்நிலையில் தனி கூர்காலாந்து கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் கூர்கா ஜன்முக்தி மோச்சா தலைவர் பிமல் குருங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் சனிக்கிழமை முதல் மோர்சா காலவரையற்ற பந்தில் ஈடுபடவிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளின் செயல்களில் தலையிடுகிறது என்றும், நன்றாக நடக்கும் தனது அரசை கவிழ்க்க அது சதி செய்வதாகவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டார்ஜிலிங்குடன் தெலுங்கானாவை ஒப்பிடக் கூடாது. எல்லாம் தீர்க்கப்பட்ட பிறகு டெல்லி ஏன் அமைதியான சூழலை கெடுத்து, நெருப்புடன் விளையாட குறியாக உள்ளது? கூர்காலாந்து அதிகாரிகளை தனி இயக்கமாக ஆகுமாறு டெல்லி தான் ஆலோசனை வழங்கியுள்ளது. டார்ஜிலிங் நம் மாநிலத்தின் ஒரு பகுதி. நாம் ஒன்றுபட்டு உள்ளோம், இனியும் அப்படியே இருப்போம். அரசியல் கட்சியும், யூனியன் அரசும் ஏதாவது சதி செய்தால் அதை டார்ஜிலிங் மற்றும் மேற்கு வங்க மக்கள் சேர்ந்து முறியடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications