ஜெய் தெலுங்கானா.... மக்கள் உற்சாகக் கொண்டாட்டம், ஆடல், பாடலுடன் ஆரவாரம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில அறிவிப்புக்கு தெலுங்கானா பகுதி மக்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆடல், பாடலுடன் தெருக்களில் கூடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் திருவிழாக் கோலமாக உள்ளது.
டெல்லியில் உள்ள ஆந்திரா பவன், ஹைதராபாத் மற்றும் பிற தெலுங்கானா பகுதிகளில் விழாக் கோலமாக காணப்பட்டது.

பெரும் நிம்மதி தந்த அறிவிப்பு
தெலுங்கானா பகுதி மக்களின் மிக நீண்ட நெடிய போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது அந்த மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துள்ளது.

சந்திரசேகர ராவ் சந்தோஷம்
கடந்த 12 வருடமாக இந்தப் போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ். அவர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை தெலுங்கானா பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், நடனமாடியும், மகிழ்ச்சிப் பேரணிகள் நடத்தியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

டெல்லியில்
டெல்லியில் உள்ள ஆந்திரா பவனிலும் தெலுங்கானா ஆதரவாளர்கள் திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். தெலுங்கானா பிராந்தியத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் திரண்டு வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விண்ணைப் பிளந்த ஜெய் தெலுங்கானா கோஷம்
ஜெய் தெலுங்கானா என்று கோஷமிட்டு கொண்டாடினர். லட்டுக்களை வழங்கி மகிழ்ந்தனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications