கலவரத்தால் மது விற்பனை சரிவு- இழப்பு... ராமதாஸ் ரூ20 கோடி இழப்பீடு தரக் கோரி டாஸ்மாக் வழக்கு

சமீபத்தில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கைது செய்யப் பட்டார். அப்போது உண்டான கலவரத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் உண்டானதாக வழக்குகள் தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலவரத்தின் காரணமாக டாஸ்மாக்கின் விற்பனை சரிந்ததாக 28 வழக்குகள் தொடரப்பட்டன.
அதில், ‘டாஸ்மாக் தரப்பில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மே மாதம் 1 முதல் 15-ந் தேதி வரை டாஸ்மாக் மது விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். அதாவது ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை நடந்த விற்பனை அளவை குறிப்பிட்டு அதை விட பல மடங்கு குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஊழியர்கள் மாலை 6 மணிக்கே கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரமுடியவில்லை. டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்ததே ஆகும் என்று டாஸ்மாக் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. எனவே டாஸ்மாக்கிற்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை பா.ம.க. கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம், பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனியடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக வழக்குகள் ஆக.13-ந் தேதிக்கும், டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் ஆக. 19-ந் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ம.க. வக்கீல் பாலு கூறியதாவது,‘‘பொது சொத்தை சேதப்படுத்தியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் டாஸ்மாக்கிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.தமிழகத்தில் முழுமையாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் குறிப்பிட்ட 15 நாட்களில் மது விற்பனை குறைந்து விட்டதாக கூறி இழப்பீடு கேட்பது முறையாகாது. யாரால் இழப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு மூலம் தீர்வு காண்பதுதான் முறையாகும். இழப்பீட்டு தொகையை பா.ம.க.விடம் வசூலிப்போம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த ஒரே காரணத்திற்காக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இல்லாததை நியாயப் படுத்துகிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications