For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம்: அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Aam Aadmi Party gets broom as symbol for election
டெல்லி: அர்விந்‌த் கெஜ்‌ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்த அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் கமிஷனில் கட்சியை முறையாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் மாதத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அரசின் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி தீர்வை ஏற்படுத்தும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலில் நிறைந்துள்ள ஊழலை எங்களின் சின்னமான துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புவதாக ‌கூறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் சின்னம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

English summary
The Aam Aadmi Party (AAP) said that it will contest the coming Delhi assembly election with "broom" as its symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X