பார்லி. மழைக்கால கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா இல்லை: சுசில்குமார் ஷிண்டே

Subscribe to Oneindia Tamil

No Telangana Bill in monsoon session: Shinde
டெல்லி: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படமாட்டாது என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, திங்கள்கிழமையன்று தொடங்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படமாட்டாது. அனேகமாக இந்த மசோதா அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம்.

பொதுவாக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்கு 8 முதல் 9 மாதங்களாகும். இருப்பினும் அடுத்த ஐந்தரை அல்லது 6 மாதங்களிலோ அல்லது இன்னும் விரைந்தோ தெலுங்கானாவை நடைமுறைப்படுத்துவோம்.

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தெலுங்கானாவுக்காக தீர்மானம் கொண்டு வந்தால் நல்லதுதான். அரசியல் சாசனப்படியே ஒரு மாநிலம் உருவாக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+