கச்சத்தீவு, இலங்கை காமன்வெல்த் மாநாடு பற்றி பார்லி.யில் குரல் எழுப்புவோம்: டி.ஆர். பாலு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் பார்லிமென்ட்டை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பார்லிமென்ட்டில் வலியுறுத்துவோம்.
அதுபோல இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவும் பார்லிமென்ட்டில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.
இதேபோல் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எம்.பிக்களும் தனி மாநிலம் கோரி பிற மாநில எம்.பிக்களும் குரல் கொடுக்கக் கூடும் என்பதால் மழைக்கால கூட்டத் தொடரும் கூட சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications