அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பார்லி.யில் விவாதிக்க தயார்: பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், நடப்பு மழைக்கால கூட்டத் தொடர் பயனுள்ளதாக அமையும்.

ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறைவேற்றவும் பார்லிமென்ட் சுமூகமாக நடைபெறவும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications