கரூர் அருகே காவிரியில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கரூர் அருகே உள்ள நெரூரில் காவிரி ஆற்றில் இன்று காலை வாங்கபாளையத்தைச் சேர்ந்த அண்னன் தம்பிகள் மனோகரன், பால சபரீஸ்வரன் மற்றும் பிரவீன் ஆகியோர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் ஆற்றில் மூழ்கினர். இதில் பால சபரீஸ்வரனின் உடல் மட்டும் மீட்கபட்டு உள்ளது. மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications