வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்
துபாய்: இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.
இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர்.
நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் நாங்கள் ரயில் ஏற முடியாமல் போனது என்றார்.
இந்த விவகாரம் குறித்து மதுமதி அங்கு போலீஸ் அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார். இதுகுறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரி ரமதான் அப்துல்லா கூறுகையில், உடைக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. கெளரவமான உடை எதுவாக இருந்தாலும் தாராளமாக அணிந்து செல்லலாம். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications