தமிழகத்தில் மேலும் ஒரு பரபரப்பான வாக்கிங் படுகொலை!
சேலம்: தமிழகத்தில் மேலும் ஒரு வாக்கிங் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் வாக்கிங் போன வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முக்கியப் பிரமுகர்கள காலையில் வாக்கிங் போகும்போது கொல்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
முன்பு மதுரையில் திமுக பிரபலமான தா.கிருட்டிணன் வாக்கிங் போனபோது படுகொலை செய்யப்பட்டார். அவரது கட்சியினரே அவரை கூலிப்படையினராக செயல்பட்டு கொன்றனர்.
அதேபோல இன்னொரு திமுக பிரபலமான கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் போனபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கை, கால்களைக் கட்டி அவரது பிணத்தை வீசி விட்டுப் போனார்கள் கொலையாளிகள்.
இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவும், வாக்கிங் போனபோதுதான் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில்,சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் வக்கீல் இளம்வழுதி என்பவர் வாக்கிங் போனபோது சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலையில் நடைபயிற்சி சென்ற அவர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் பிணமாக கிடந்துள்ளார். அவரது தலையில் வெட்டுக் காயம் இருப்பதால் இது கொலையாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இளம்வழுதி கொலையை கண்டித்து சேலத்தில் சுமார் 4500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications