300 வருட பழமையான பனிமய மாதா ஆலயத்தில் தங்கத் தேரோட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பனி மயமாதா ஆலயத்தில் இன்று தங்க தேர் பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற தேவலாயங்களில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயமும் ஓன்று. இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி தேர் பவனியுடன் நிறைவு பெறுவது
வழக்கம்.
10தினங்கள் நடக்கும் இத்திருவிழா வைக் காண நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் இங்கு திரண்டு வருவது வழக்கம்.இந்தாண்டு திருவிழா கடந்த 26ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது.

300 வருட பழமையான ஆலயம்
இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் ஆகும். இந்த ஆலயம் உருவாக்கப்பட்டு 300 ஆண்டுகள் முடிவடைய போகிறது. கடைசியாக தங்க தேரோட்டம் 2007ல் நடைபெற்றது. தற்போது 6 வருடம் கழித்து பனி மய மாதா தங்க தேரில் பவனி வந்துள்ளார்.

திருப்பலி
இதை முன்னிட்டு 4.30 மணிக்கு தேரில் பேராயர் பீட்டர் பர்னாட்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. 5.15 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7 மணிக்கு ஆடம்பர பெருவிழாவும் நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை வகித்தார்.

தங்கத் தேர் பவனி
தினமும் பல்வேறு ஆராதனைகள் நடைப் பெற்றன.இறுதி நாளன இன்று காலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தங்கதேர் பவனி நடைப் பெற்றது.பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குவிந்த பக்தர்கள்
விழாவை காண இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கபூர், மலேசியா, அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ மக்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
தங்க தோரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் எஸ்பி துரை மேற்பார்வையில் டவுன் டிஎஸ்பி பெஸ்கி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்க்கள் உள்ளி்ட்ட 900 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications