கேரளாவில் கனமழைக்கு 14 பேர் பலி: கொச்சி ஏர்போர்ட் 2வது நாளாக மூடல்
கொச்சி: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேரளாவில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு ஆற்றில் அபாய அளவைத் தொடும் அளவு நீர் ஓடுகிறது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் கேரள மக்கள் இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அலுவா ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோவிலில் கூடினர். பாதி கோவில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

ஓடு தளத்தில் வெள்ளநீர் புகுந்ததால் கொச்சி விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. இன்று இரண்டாவது நாளாகவும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் 20,000 பேர் இடுக்கி மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மழையால் பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடற்படை வீரர்கள் கொச்சிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 180 பேரை நேற்று காப்பாற்றினர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications