சீமாந்த்ரா குறையைக் கேட்டறிய நால்வர் குழுவை அமைத்தது காங்கிரஸ்!!

Subscribe to Oneindia Tamil

Seemandhra, Rayalaseema leaders meet Sonia Gandhi over Telangana
டெல்லி: கடலோர ஆந்திரா, ராயல சீமாவை உள்ளடக்கிய சீமாந்த்ரா மக்களின் மனக்குறைகளை கேட்டறிய நால்வர் குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகராக ஹைதராபாத் இருப்பதை விட்டுக் கொடுக்க இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்களான பல்லம் ராஜு, சிரஞ்சீவி, பனபாக லட்சுமி, புரந்தேஸ்வரி, கிருபாராணி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கானா தொடர்பான தங்கள் மனக்குறைகளை சோனியாவிடம் அவர்கள் எடுத்துக் கூறினர்.

இதைத் தொடர்ந்து கடலோர ஆந்திரா, ராயலசீமா மக்களின் குறைகளைக் கேட்டறிய மூத்த தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று சோனியா உறுதி அளித்திருந்தார்.

இந்த உறுதி மொழி அடிப்படையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே. ஆண்டனி, திக்விஜய்சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், வீரப்ப மொய்லி ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+