9வது நாளாக ஓயாத 'சீமாந்த்ரா' போராட்டங்கள்... 6வது அமைச்சர் ராஜினாமா கடிதம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவில் 9 வது நாளாக போராட்டங்கள் இன்றும் தொடர்ந்தன. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 30-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது 'சீமாந்திரா'. ஏற்கெனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று 6வதாக அமைச்சர் தொட்ட நரசிம்ஹம் தமது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜினாமா செய்த அமைச்சர் விஸ்வரூப் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் அமைச்சர் அருணா குமாரி, திருப்பதியில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார். அவரும் தமது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காக்கிநாடாவில் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூவின் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பல்லம் ராஜூ ராஜினாமா செய்யும் வரை போராட்டமும் முற்றுகையும் தொடரும் என்றனர் போராட்டக் குழுவினர்.
ஓங்கோலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. விஜயவடா- மசூலிப்பட்டினம் நெடுஞ்சாலை எங்கும் மாணவர் தலைகளாக காட்சியளித்தன.
மேலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வேங்கடயபாளையம் முதல் 35 கிலோ மீட்டர் பாதயாத்திரையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொட்ட திருமூர்த்துலு மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை இன்று மாலை காக்கிநாடாவில் நிறைவடைகிறது.
இதனிடையே ரம்ஜானை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் நாளை மாலை வரை முழு அடைப்பை கைவிடுவதாக ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications