For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

170 அடி உயர பாரீஸ் மர்மக்கோபுரம்: 500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு

Google Oneindia Tamil News

பாரீஸ்: கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த பாரீஸ் கோபுரமொன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் திறக்கப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில், பாரீஸ் நகரில் உள்ள இக்கோபுரம் கட்டப் பட்டது 1500ல். ஈபிள் டவருக்கு இணையாக கட்டப்பட்ட இக்கோபுரம், சில நாட்களிலேயே மூடு விழாவும் கண்டது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின் காரணமாக இக்கோபுரத்திற்கு சேதாரம் ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்பட்டது.

கிட்டத்தட்ட மூடப்பட்டு 500 வருடங்களுக்குப் பிறகு, தற்போது சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது இக்கோபுரம். கிட்டத்தட்ட 170 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு 300 அழகிய படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. பாரீஸ் நகரத்தின் நடுவே அமையப் பட்டுள்ள இந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்றால், நகரின் அழகு மொத்தத்தையும் காணலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும் இக்கோட்டையின் நுழைவு அனுமதிச்சீட்டின் விலை 6 யூரோக்கள் மட்டுமே.

English summary
The Eiffel Tower has a new rival, five centuries old. For the first time since it was built in the early 1500s, the Tour Saint Jacques, a mysterious stand-alone Gothic tower in the geometric centre of Paris, is opening to the public this summer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X