For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் அட்டை அவசியமில்லை; ஆனால் அவசியம்… குழப்பும் மத்திய அரசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Aadhaar not mandatory to avail Govt services: Rajeev Shukla
டெல்லி: அரசிடமிருந்து சேவைகளை பெற ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு என நேரடி மானியத்திட்டத்தில்,மானியத்தை பெற வங்கி கணக்குடன் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிடுதல் அவசியம் என்று கூறியுள்ளது.

இது குறித்து மாநிலங்கள் அவையில் திட்டமிடல் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு ஜூலை26 ஆம் தேதி வரை ஆதார் அடையாள அட்டை பெற 39.36 கோடி பேர் விண்ணபித்துள்ளனர்.ஏற்கனவே 42.65 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றார்.

மேலும் நேரடி மானியத்திட்டத்தில் பயன்பெற வங்கி கணக்குடன் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிடுதல் அவசியமாகிறது. ஆனால் வங்கிகளில் கணக்குகள் துவங்கவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றிற்கு ஆதார் அடையாள அட்டை அவசியமில்லை என்று கூறினார்.

அப்ப ஆதார் அட்டை கண்டிப்பாக வாங்கவேண்டுமா? தேவையில்லையா என்பதை சொல்லாமல் குழப்பியுள்ளார் மத்திய அமைச்சர்.

English summary
Aadhaar card is not a must for availing services like opening bank accounts, admission in school and obtaining passport, Parliament was informed today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X