இன்று நாடு முழுவதும் உற்சாகமாக ரம்ஜான் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை/டெல்லி: நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரம்லான் பிறை தெரிந்ததை அடுத்து தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுதீன் அயூப் அறிவித்திருந்தார். இதையடுத்து பள்ளி வாசல்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பாட்னா, ஸ்ரீநகர் உட்பட நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.













Click it and Unblock the Notifications