சோனியாவை சந்தித்தார் விஜயசாந்தி! டி.ஆர்.எஸ். கட்சியும் உடைகிறது!!

தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினால் தமது கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியையே காங்கிரஸில் இணைத்துவிடுகிறேன் என்று உறுதி கொடுத்தார் அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ். தற்போது தெலுங்கானாவை உருவாக்குவோம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.
ஆனால் சந்திரசேகர் ராவோ, நாடாளுமன்றத்தில் தெலுங்கானாவுக்கான மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அக்கட்சியின் மேடக் தொகுதி எம்.பியான நடிகை விஜயசாந்தி ஏற்கெனவே காங்கிரஸில் இணையப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் இணைவது உறுதியாகிவிட்டது.
இதேபோல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 17 எம்.எல்.ஏக்களில் 9 பேர் டெல்லியில் ஆந்திராவுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங் மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இவர்களும் விரைவில் காங்கிரஸில் இணைய இருக்கின்றனர்.
இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி இரண்டாக உடைவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications