For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் போயும் இந்த வேலையை நீங்க விடலையாப்பா..

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கவரிங் நகைகளைக் கொடுத்து அடகுக்கடைகளில் ஏமாற்றப் பார்த்த இரண்டு இந்தியர்களுக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணி புரிந்து வரும் இந்தியர்களான சுப்ரீத் ராம் சித்து (22), ஜஸ்விந்தர் சிங் பாரார் (38) மற்றும் ஜக்தார்சிங் (28) ஆகியோர் சமீபத்தில் அடகுக் கடைக்குச் சென்றனர். அடகுக்கடையில் சில தங்க நகைககளைக் கொடுத்து பணம் கேட்டுள்ளனர். பின்னர், தங்க நகைகளின் பேரில் லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

அவர்கள் சென்ற பின்னர் திடீரென, சந்தேகம் அடைந்த அடகுக்கடைக்காரர், நகைகளை சோதித்துப் பார்த்தபோது அவை போலியானவை என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கவரிங் நகைகளை தங்க நகைகள் எனக் கூற்இ ஏமாற்ற பார்த்த அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் பிடிபட்டனர். வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. விசாரணையின் முடிவில் சித்துவுக்கு 15 மாத சிறைத் தண்டனையும், ஜஸ்வீந்தசிங்குக்கு 10 மாத ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு குற்றவாளியான ஜக்தார் சிங்குக்கு இம்மாத இறுதியில் தண்டனை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Two Indian nationals have been jailed in Singapore for a fake jewellery scam they carried out last year, according to a media report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X