மனநலம் பாதித்த கணவருடன் செக்ஸ் வைத்தால் ஆயுள் தண்டனை... மனைவிக்கு யு.கே. கோர்ட் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தும் நபர்களும் குற்றவாளிகளே. சட்டப்படி அவர்களது திருமணம் செல்லாது. சட்டத்தை மீறி ரகசியமாகத் திருமணம் செய்து கொள்பவர்களின் திருமணமும் ரத்து செய்யப்படும்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியப் பெண்ணொருவர், இங்கிலாந்தில் விநோத வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ‘இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தன்னை இங்கிலாந்தில் வாழும் சீக்கிய குடுமப்த்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கடந்த 2009ம் ஆண்டு பஞ்சாபில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் அவர் மனநிலை சரி இல்லாதவர் என்பது திருமணத்துக்குப் பிறகே தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தாங்கள் இப்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும், எனவே, தங்கள் திருமண பந்தத்தை ரத்து செய்யக் கூடாது எனவும் கூறியிருந்தார். ஏற்கனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேஷ கோர்ட்டில் அரசுத்தரப்பு முறையிட்டதையும், பிறகு அந்த வாலிபரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்ததையும் விவரமாக அதில் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனநிலை பாதிக்கப்பட்ட அந்நபருடன் அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்' என தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ள அப்பெண்ணின் மன வலிமையை பாராட்டிய நீதிபதி, அவர்களது திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications