2 மாதங்களுக்குப் பிறகு பிறகு உத்தரகாண்டில் 48 உடல்கள் மீட்பு!
கேதார்நாத்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் இருந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
புகழ்பெற்ற கேதார்நாத் பகுதியில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சேதம் அதிகம் ஏற்பட்டது கேதார்நாத் பகுதியில்தான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநில போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.அப்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்படும் 48 பேரின் உடல்கள் கிடைத்தன. அவற்றுக்கு அங்கேயே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
மேலும் அங்கிருந்து ரூ.5 லட்சம் பணம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டன.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக உத்தரகாசி, ராணிகட், ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்த 4 பேர் மந்தாகினி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அங்கு நடைபெற்று வரும் சாலைப்பணிகள் உள்ளிட்ட நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications