ஒடிஷா நிலக்கரி சுரங்க விபத்து- மண்ணில் புதைந்து 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சுந்தர்கார்: ஒடிஷாவின் சுந்தர்கார் அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுந்தர்கார் மாவட்டத்தில் மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவினால், சுரங்கத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 9 பேர் மண்ணில் புதைந்து அப்படியே பலியாயினர்.
மீட்புப் படையினரால் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications