உணவு மசோதாவை ஆதரிக்க கருணாநிதி நிபந்தனை

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் புதிய சட்டம் மொத்த மக்கள் தொகையில் 67.5 சதவீத மக்களுக்கு பயன்பட வழிவகுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது பொது விநியோக திட்டத்தின் மூலம், மாநிலத்தின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் பயனடைந்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த புதிய சட்டம் பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்று தமிழக அரசு கூறுகிறது.
தமிழக முதல் அமைச்சர் தெரிவித்துள்ள குறைபாடுகளும், கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தப்பட கூடியவை அல்ல. அவரும்கூட, இந்த உணவு பாதுகாப்பு மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்றும், அவை என்னென்ன என்றும்தான் பட்டியலிட்டிருக்கிறார்.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த மசோதா காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் பொது விநியோக திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும்; யாருக்கும் பாதிப்பு கூடாது என்பதிலும்; வேளாண்மையை தொடர்ந்து மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் நலன் காத்து, அவர் தம் விளை பொருள்களுக்கு கட்டுப்படியாக கூடிய உரிய விலை கிடைத்திடவேண்டும் என்பதிலும்; மாநில உரிமைகள் பறிபோய் விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த மசோதாவின் காரணமாக கிடைக்கக்கூடிய பயன்களையும் இழந்து விடக்கூடாது.
ஒட்டு மொத்தமாக மாநில அரசு தான் இந்த மசோதாவினால் நடைமுறையில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சீர்தூக்கி பார்த்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த மசோதாவினால் தமிழ்நாட்டிற்கு பாதகம் தான் ஏற்படும், சாதகம் ஏற்படாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தால்; சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்ததை போல, இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை பொறுத்தவரை தமிழகம் ஏற்காது என்று அறிவித்துவிடலாம். ஆனால் முதல்-அமைச்சரே தன் கடிதத்தில் திருத்தங்கள் தான் தேவை என்று கூறியிருக்கிறார்.
எனவே உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக எதிர்த்திடாமல், அப்படியே ஆதரித்தும் விடாமல் அவசர அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப கொண்டு வர மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கின்ற மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாமல், இந்த உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தி.மு.க. அதனை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications