கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: சென்னையில் வைகோ உட்பட 200 பேர் ஆர்ப்பாட்டம்
சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 16 இயக்க தலைவர் திருமுருகன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைத்தால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நமது சந்ததிகளை அழித்து விடும். எனவே தான் அணு உலை எதிர்ப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அணு உலையில் இருந்து வெளியேறும் அணு கழிவுகள் கடலில் கொட்டப்படும். இதனால் கடல் வாழ்வாதாரம் பாதிக்கும்.

இலங்கையில் தமிழர்கள் உயிர்களை அழித்தது போதாது என்று மத்திய அரசு மேலும் தமிழர்களின் வாழ்வை சீர் அழிக்க அணு உலை மூலம் முடிவு செய்து உள்ளது. கூடங்குளம் அணு உலை மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 900 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் தினமும் அங்கிருந்து 140 மெகாவாட்டுக்கு மேல் தர முடியாது என்பது தான் உண்மை.

மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களை ஏமாற்றுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். கூடங்குளம் அணு உலை மூட படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கடந்த மே 6-ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நிபந்தனைகளை அமல் படுத்தாமல் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழங்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வாபஸ் பெறவில்லை.
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 59 விஞ்ஞானிகள் பழுதடைந்த கருவிகளின் உதிரி பாகங்கள் கூடங்குளத்தில் பயன்படுத்த படுவதாகவும் அதை அகற்றி விட்டு புதிய உதிரி பாகங்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதை கண்டு கொள்ளவில்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications