2 லட்சம் முட்டைகளை ரோட்டில் கொட்டிய பிரான்ஸ் விவசாயிகள்: விலையைக் கூட்ட போராட்டம்
பாரிஸ்: பிரான்சில் முட்டைகளை தெருவில் போட்டு உடைத்து செயற்கையாக முட்டைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கும் நவீன யுக்தியில் இறகியுள்ளனர் அந்நாட்டு வியாபாரிகள்.
பிரான்ஸ் நாட்டு பிரிட்டனி பகுதியில் கோழிப்பண்ணக்ள் அதிகம். அதனால் அங்கு அளவுக்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப் படுகிறது. அதிகளவு முட்டைகள் கிடைப்பதால் அங்கு முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட இவர்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லையாம்.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கோழிப் பண்ணைகளில், முட்டையிடும் கோழிகளை இடவசதி மிகுந்த தரம் உயர்ந்த கூண்டுகளில் வைத்துப் பராமரித்தல் வேண்டும் என ஐரோப்பிய யூனியன் புது உத்தரவு பிறப்பித்தது.
லாபமின்றி இத்தொழில் செய்ய இயலாது என எண்ணிய அவ்வியாபாரிகள், பிரிட்டனி பகுதியில் முட்டை உற்பத்தியை 5சதவீதம் குறைக்கச் சொல்லி போராட்டத்தில் இறங்கினர். அதன் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 2 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர்.
இதன் மூலம், பிரிட்டனியில் நடைபெறும் 5 சதவிகித முட்டை உற்பத்தியை சமன் செய்யலாம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடரும் இத்தகைய முட்டை அழிப்பு போராட்டங்களின் முலம் முட்டைகளின் தேவையை அதிகரித்து விலையை கூட்ட முயற்சி செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications