மீண்டும் வாலாட்டியது பாகிஸ்தான் ராணுவம்.. 48 மணி நேரத்தில் 3வது முறை
Subscribe to Oneindia Tamil

அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 5 வீரர்களைக் கொன்று ஒரு வாரத்திற்குள்ளாகவே 3வது முறையாக இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தர் மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிறு மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் படையினர் சுட்டதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக கனசக் பகுதியில், நடந்த பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications