பிரமாண்டக் கூட்டத்துடன் பாஜக தேர்தல் பிரசாரத்தை ஹைதராபாத்தில் தொடங்கினார் மோடி
ஹைதராபாத்: பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் தொடங்கினார்.
ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தனது முதல் பிரசார உரையை நிகழ்த்தினார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அவரது இந்த முதல் பிரசாரக் கூட்டம் பெரும் கவனிப்புக்குரியதாக மாறியிருந்தது.
மோடி தனது உரையில் காங்கிரஸுக்கு எதிராக என்னை மாதிரியான திட்டங்களை, பிரசாரத்தை, கோஷத்தை வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் பொதுவான உரையாகவே அது இருந்தது.

பெரும் கூட்டம்
மோடியின் இந்தக் கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக தரப்பு எதிர்பார்த்தது. அதற்கேற்ப பெரும் கூட்டம் கூடியிருந்தது.

முதல் தேர்தல் கூட்டம்
பாஜகவின் முதல் லோக்சபா தேர்தல் பொதுக் கூட்டம் என்பதால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

புதிய சிந்தனை புதிய நம்பிக்கை
பாஜக தனது தேர்தல் பிரசார ஸ்லோகனாக, புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளது. இது இந்த கூட்டத்தில் வெளியிடப்படும்.

ஹைதராபாத் முழுவதும் மோடி மயம்
ஹைதராபாத் நகரம் முழுவதும் மோடியின் போஸ்டர்கள்தான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளனர் பாஜகவினர்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications