ரம்ஜான் பண்டிகை, தெலுங்கானா பிரச்சினை... திருப்பதியில் குவிந்த 2 லட்சம் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

Two lakh people at Thirupathy
திருமலை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு விடுமுறை விடுக்கப்பட்டதால் திருப்பதி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவில் போராட்டம் வெடித்தது. தொடர் மறியல்கள், கடையடைப்பு உள்ளிட்டப் போராட்டங்கள் காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக நீட்டித்த தொடர் போராட்டங்களால், திருப்பதி ‘ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததது. எளிதாக சாமி தரிசணம் செய்ய முடிந்தது மட்டுமல்லாமல், சாமியை அருடிகல் சென்றும் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை முதல் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் திடீர் என அதிகரித்தது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள்தான் பெருமளவில் குவிந்தனர். அதிக கூட்டம் காரணமாக வி.ஐ.பி. தரிசனம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இதனால் சாதாரண தரிசனத்துக்கு 33 மணி நேரத்திற்கும் அதிகமாதனதாக பக்தர்கள் தெரிவித்தனர். 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்ட போதிலும் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நிற்கிறார்கள்.

தரிசனத்துக்கு தாமதம் ஆவதால் அறை எடுத்தவர்கள் காலி செய்ய முடியவில்லை. எனவே தங்கும் அறைக்காக பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் காத்து நிற்கிறார்கள். அன்னதானம் கூடத்திலும் கட்டுங்கடங்காத கூட்டம் நிலவியது.

தரிசனத்துக்கு தாமதம் ஆவதால் பக்தர்கள் 2 நாள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும்படி தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வி.ஐ.பி.க் கள் கண்டிப்பாக வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்பதி கோவில் ஊழியர்கள் மற்றும் பஸ் ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் வந்துள்ள பக்தர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+