தெலுங்கானாவுக்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்! பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்!
திருமலை: தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது; அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்துள்ளதால் திருப்பதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர் சங்கங்களால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதை அமைச்சர்கள் ஏற்காதததால் 4 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக அரசு ஊழியர் சங்கத் தலைவர் பி.அசோக் பாபு தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அரசுப் பணிகளும் போக்குவரத்து சேவையும் முடங்கிவிட்டது. திருப்பதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்துக்கான பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருப்பதி உள்பட சீமாந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications