சீனியர் அமைச்சர்கள் 2 பேரை நீக்க ஜெ. முடிவு! கலக்கத்தில் கோட்டை!

அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அமைச்சரும் நிரந்தரம் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஏற்கெனவே பலமுறை அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் வரும் 18ந் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பல அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தொடர்ந்து பல அமைச்சர்கள் மீது புகார் வந்து கொண்டு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகின்றது.
மேலும், அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் என இரண்டு பதவிகளை வைத்துள்ளவர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக, அதிமுகவினர் மீது கட்சியினர் கொடுக்கும் புகார்களை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்வதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
இதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் அந்தக் குழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர். மேலும் சிலர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரை நால்வர் அணி என்று அதிமுகவில் வர்ணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் நால்வர் அணியில் 2 பேரின் பதவி பறிபோகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிற அமைச்சர்களை விட இந்த நால்வர் அணி தான் பெரும் கலக்கத்தில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications