தூக்கு ரத்து கோரும் புல்லரின் மறுஆய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

டெல்லியில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமது கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புல்லர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து புல்லருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மார்க்கண்டேய கட்ஜு மற்றும் பல்வேறு சீக்கிய அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் புல்லர் சார்பில் மறு ஆய்வு மனு ஒன்றும் மே முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புல்லர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். இம்மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் புல்லரின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தற்போது புல்லரின் மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தூக்கு நிறைவேற்றப்படலாம். அல்லது முன்னைப் போல பஞ்சாப் மாநில அரசு மீண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு கோரலாம் எனத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications