கள்ளக்காதலிலையை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மனைவியுடன் தப்பிய கணவர்
பொள்ளாச்சி: திருமணம் செய்து கொள்ளுமாறும், மனைவியை விட்டுப் பிரிந்து வந்து விடுமாறும் வற்புறுத்திய தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பின்னர் தனது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பருடன் தலைமறைவான நபரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரகாஷ் குமார். இவரது மனைவி 32 வயதான சத்யபாமா. இவர்கள் இருவரும் ஊஞ்சவேலமபட்டி கிராமத்தில் சமீபத்தில் வாடகைக்கு குடியமர்ந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றனர். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் குமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் போய் பார்த்தபோது அங்கு ஒரு இளம் பெண் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் சிதைந்து போயிருந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண்ணின் பெயர் ஜெகதாம்பாள் என்றும் 28 வயதாவதும், அவர் நாகேந்திர குமார் என்பவரின் மனைவி என்றும் தெரிய வந்தது.
ஜெகதாம்பாளும், பிரகாஷ் குமாரும் கள்ளக்காதலர்கள். இந்த நிலையில் சத்யபாமாவை விட்டு விட்டு தன்னுடன் வந்து விடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி வந்துள்ளார் ஜெகதாம்பாள். ஆனால் இதை ஏற்கவில்லை பிரகாஷ் குமார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர் ரூபன்ராஜ் என்பவரிடமும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெகதாம்பாளை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பிரகாஷ் குமார். அங்கு வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு மூன்று பேரும் தப்பியோடி விட்டனர்.
போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். அதில் நாகர்கோவில் அருகே பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications