உ.பி ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சஸ்பென்ட் உத்தரவை எதிர்த்த மனு- சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டுத் தலத்தின் சுற்றுச் சுவரை இடித்ததால் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தார் என்று கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை அம்மாநில அரசு கடந்த மாதம் சஸ்பென்ட் செய்தது.
இந்த சஸ்பென்ட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் கூட அனுப்பியிருந்தார்.
இதனிடையே துர்கா சக்தி சஸ்பென்ட்டை எதிர்த்து மனோகர் லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தமது சஸ்பென்ட் உத்தரவுக்கு எதிராக உரிய அமைப்பு மூலம் அவர் முறையீடு செய்யலாம் என்று கூறி பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications