மாணவன் மரணம்: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கல்லூரியை சூறையாடிய மாணவர்கள்
வேலூர்: உயிருக்கு போராடிய மாணவனை காப்பாற்ற முன்வராத திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்ப கல்லூரிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் துறைமுருகன் மகன் கதிர் ஆனந்த், காட்பாடி சித்தூர் சாலையில் கிங்ஸ்டன் என்ற பெயரில் எஞ்ஜினீயரிங் கல்லூரி நடத்தி வருகிறார்.
இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பந்த் நடந்து வருவதால் கல்லூரி நிர்வாகத்தினர் கல்லூரி பஸ் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர்.இதனால் அந்த பகுதி மாணவர்கள் சித்தூரில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சித்தூரை சேர்ந்த மாணவன் ஷர்வான்குமார், கடந்த செவ்வாய் கிழமை கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.
அவருடன் சென்ற மற்றொரு மாணவன் சாய்சந்துரு, கல்லூரியை தொடர்பு கொண்டு கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஷர்வானை எடுத்துச் செல்ல உதவி கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டது.
பின்பு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஷர்வான்குமாரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் ஷர்வான் குமார் பரிதாபமாக இறந்தான்.
இந்த தகவல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவ ஆவேசம் அடைந்த மாணவர்கள், திருப்பதி - வேலூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். கல்லூரி நிறுவாகத்திர்க்கு எதிராக கோஷமிட்டனர். கல்லூரி வாட்ச்மேன் அறை ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஆந்திர மாணவர்களுக்கு பந்த் முடியும் வரை கல்லூரி மாணவர்களுக்கு ஆஸ்டல் வசதி செய்து தரவேண்டும், உயிரிழந்த மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பாதக கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications