அட இங்க பார்றா.. இது நடிகை குஷ்புவின் பொருளாதார கணக்கு!
சென்னை: இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் மதிப்பை விட சரிந்து கொண்டே செல்கிறது. இன்று ரூபாயின் மதிப்பு காலையில் 62.35 ஆக இருந்தது. பின்னர் வர்த்தகத்தின் நடுவே 62.70ஐம் தொட்டது.
இதனால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி ஆகியவை பெரும் சரிவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன.

'கருத்து' குஷ்பு
திரை பிரபலங்களில் பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் கருத்து சொல்லுவதற்கு தயங்குவார்கள் ஆனால் நடிகை குஷ்பு திமுகவில் சேருவதற்கு முன்பே இப்படி கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கியும் இருக்கிறார்.

குஷ்பு கருத்து
இந்த நிலையில் நடிகையும் திமுக பிரமுகருமான குஷ்பு ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

குஷ்பு சொல்லியிருப்பது என்ன?
சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் "ரூபாய் மதிப்பு முன்னெப்போதையும் விட சரிவது மிகவும் அபாயகரமானது. மிக மோசமான நிலைமை உருவாவதற்கு முன்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கல் வருமா?
ரூபாய் மதிப்பு சரிவு விவகாரத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிக்கும் முன்பே தமது சொந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் குஷ்பு. மத்திய அரசை ஒருப்பக்கம் திமுக எதிர்த்தாலும் லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கான கதவை ஒருபக்கம் திமுக திறந்து வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படியெல்லாம் கட்சி தலைமையை மீறி குஷ்பு கருத்து சொல்லக் கூடாது என்கின்றனர் திமுக உ.பிக்கள்
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications