பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்கப் போகிறது.. ராணுவம் எச்சரிக்கை
ரஜோரி: விபரீதம் தெரியாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது பாகிஸ்தான் என்று ராணுவ தளபதி வி.பி.சிங் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள முதல் எச்சரிக்கை செய்தி இது என்பதால் எல்லைப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
ஐந்து இந்திய வீரர்களை தாக்கிக் கொன்ற பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா ராணுவத்திடமிருந்து முதல் முறையாக எச்சரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் செய்தியாளர்களிடம் நேற்று 25வது இன்பேன்டரி பிரிவு தலைமை தளபதி மேஜர் ஜெனரல் வி.பி.சிங் பேசினார். அப்போதுதான் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது...

மிகப் பெரிய தவறு செய்து விட்டனர்
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதன் மூலம், பாகிஸ்தான் ராணுவம் மிகப் பெரிய தவறுகளைச் செய்து வருகிறது. இதற்கு பொருத்தமான பதிலடி, உரிய நேரத்தில் தரப்படும்.

நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால் நிறுத்துவோம்
பாகிஸ்தான் ராணுவத்திற்கு நாங்கள் கூறிக் கொள்வது, உடனடியாக இந்த செயலை நீங்கள் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தவறு செய்து வருகிறீர்கள். விபரீதத்தை நோக்கி எங்களை இழுத்துச் செல்கிறீர்கள். நீங்கள் நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் பொருத்தமான பதிலடி உரிய நேரத்தில் கிடைக்கும்.

எங்களைப் பலவீனப்படுத்தாது
நீங்கள் எல்லை கடந்து வந்து செய்யும் செயலால் நாங்கள் பாதிக்கப்படப் போவதில்லை. பயந்து போகப் போவதில்லை. பலவீனப்பட்டும் போகப் போவதில்லை.

ஒவ்வொரு செயலுக்கும் பதில் கிடைக்கும்
நீங்கள் எங்களுக்குச் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய பதில் தரப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ராணுவமும், தீவிரவாதிகளும் கலந்த படை
தற்போது இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் இணைந்த தனிப் பிரிவாகும். அவர்களைச் சமாளிக்க இந்திய ராணுவத்திடம் முழு அளவிலான திறமை உண்டு.

தாக்குதலுக்கு ராணுவத்திற்கு சுதந்திரம்
எதிரிகள் தாக்குதல் நடத்தினால் உரிய தாக்குதலை நடத்த ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications