தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா மீது டெல்லி நீதிமன்றத்தில் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

LeT bomb expert Abdul Karim Tunda slapped by a man in a Delhi court
டெல்லி: நாட்டின் 40க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது தாக்கப்பட்டார்.

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் சதி, தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சையத் பற்றியும் ஏராளமான தகவல்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து டெல்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் இன்று அப்துல் கரீம் துண்டாவை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது ஒரு நபர், அப்துல் கரீம் துண்டாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் துண்டாவை அறைந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+