3வது நாளாக முடங்கியது ஐ.ஓ.பி. வங்கி சேவை: வாடிக்கையாளர்கள் அவதி
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தடுமாறினர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கணினி சர்வர் கடந்த 19ஆம் தேதி திடீரென பழுதானது. இதனால், பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் சென்ற வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து 3 நாட்களாக சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கோடிக்கணக்கில் பண பரிமாற்றமும் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கிளைகளின் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இதனால் அவசரத்துக்கு பணம் எடுக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறு வங்கிகளில் அவர்கள் பணம் எடுத்து சென்றனர். கடந்த 1ஆம் தேதி இதேபோல் வங்கியின் கம்ப்யூட்டர் சர்வர் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சரி செய்யப்படாததால் கடந்த 3 நாட்களாக வங்கி சேவை முடங்கியுள்ளது. இதனால், பண பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடனேயே திரும்பி செல்கின்றனர்.
அவசரத்துக்கு ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்ட வாடிக்கையாளர்கள், வேறு வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்து சென்றனர். இன்று பிற்பகலில் கோளாறு சரியாகி விடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications