மீண்டும் வேலையை காட்டியது ரூபாய் மதிப்பு: 64.43 ஆக சரிந்தது: பங்கு சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி!
மும்பை: தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த ரூபாயின் மதிப்பு இன்று காலை லேசாக உயர்ந்தது. ஆனால், பிற்பகலிலேயே மீண்டும் மதிப்பு சரிய ஆரம்பித்துவிட்டது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் மேலும் சரிந்து 64.34 என்ற நிலையை அடைந்தது. இந் நிலையில் நேற்றிரவு ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகளால் ரூபாயின் மதிப்பு சரிவது இன்று காலை நின்றது. அதன் மதிப்பு சற்று உயர்ந்து 63.55 என்ற நிலையை அடைந்தது.

ஆனால், பகலில் மீண்டு்ம் அதன் மதிப்பு 64.43 ஆக சரிந்தது.
காலையில் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தால் இன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி ஆகியவை உயர்ந்தன.
இந்தியாவில் டாலருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதால் தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. இதைத் தடுக்க இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் டாலர் வரை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம் என்று இருந்த விதியைத் திருத்தி அதை 75,000 டாலராகவும் ரிசர்வ் வங்கி குறைத்தது.
முன்னதாக டாலர்களைத் திரட்ட மத்திய அரசு கடன் பத்திரங்களையும் வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் ரூ. 22,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை ஏலத்தில் விடவுள்ளதாகவும் அரசு அறிவித்தது.
மேலும் நேற்றிரவு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், அரசின் கடன் பத்திரங்களில் ரிசர்வ் வங்கியும் ரூ. 8,000 கோடியளவுக்கு முதலீடு செய்யப் போவதாகவும், வங்கிகள் அரசுப் பத்திரங்களை வைத்திருக்க இருந்த கட்டுப்பாடுகளும், அதை பணமாக மாற்றுவதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாகவும் அறிவித்தது.
இந்த நடவடிக்கையால் இன்று காலை சற்று உயர்ந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிய ஆரம்பித்துவிட்டது. இதனால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அடுத்த ஒரு மாதத்துக்குள் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70 ஆக சரியும் என்று Deutsche Bank எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தான் ரூபாயின் மதிப்பு உயரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் இந்த வங்கி அறிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications