முதுமையில் தனிமை: பெங்களூரில், இறந்து 4 மாதங்களான பாட்டியின் அழுகிய சடலம் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில், இறந்து கிட்டதட்ட நான்கு மாதங்களுக்கு மேலாகிய 53 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் சிதைந்த உடல் புதர் மண்டிய பங்களா ஒன்றிலிருந்து போலீசாரால் மீட்கப் பட்டுள்ளது.
பரபரப்பான் நகரமான பெங்களூரின் முக்கிய பகுதியான இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தவர் 53 வயது ஷீலா ரெட்டி. இரண்டு மாடி கொண்ட சொந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவரைப் பார்ப்பதற்கு பெரும்பாலும் உறவினர்கள் வருவதில்லையாம். யாராவது எப்போதாவது வந்து உணவு கொடுத்துச் செல்வார்களாம்.

மற்றப்படி ஆள் அரவமற்ற அந்த பங்களாவில் வசித்து வந்த ஷீலா, அக்கம் பக்கத்தாரிடமும் அவ்வளவாக பழகுவது இல்லையாம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அதை அலட்சியப் படுத்திய போலீசாரோ, ‘ஏதாவது நாய் செத்த வாடையாக இருக்கும் என சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, ஷீலாவைக் காண ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது அண்ணன் சங்கர் ரெட்டி வந்துள்ளார். வீட்டிற்குள் இருந்து துர்நார்றம் வீசவே, சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அங்கே அவரது தங்கையில் எஞ்சிய உடல் பாகங்கள் அழுகிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விரைந்து வந்து பார்த்த போது, ஷீலாவின் அழுகிய உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், வீட்டை சோதனை செய்து பார்த்த போலீசாருக்கு, வீட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லையாம். எனவே, அவர் பசிக் கொடுமையால் கூட இறந்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது, ‘ஷீலா இறந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகியிருக்கலாம்' என கூறியுள்ளனர். மேலும், ஷீலாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்து நான்கைந்து மாதங்களாக வீட்டிற்குள்ளேயே பிணமாகக் கிடந்த வயதான பெண்மணியின் நிலைமை நம் நாட்டின் முதியவர்கள் நலன் குறித்த அவல நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications