பெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை!
Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவைச் சேர்ந்த சிவ் முனிஷெட்டி, ஜடேஸ்வாமி ரங்கா ஷெட்டி ஆகியோருக்கு பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு கடந்த 13ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதனால் இருவரையும் நாளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனிடையே இருவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிவ் முனிஷெட்டி திடீரென இன்று தமது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே நேரத்தில் இரு கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 4 வாரத்துக்கு அவர்களை தூக்கிலிடவும் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.
More From
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications