அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் வாழ்ந்த ‘கடல் நத்தை’
நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர்.
விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு.
ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

முட்டியில் காயம்...
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் ராச்சல். இவரது 4வயது மகன் பால் பிராங்ளின். கடந்த மாதம், பிராங்க்ளின் வீட்டருகே உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அச்சிறுவனுக்கு முட்டியில் காயம் உண்டானது.

சீழ் பிடித்த புண்...
சிறிய காயம் தானே என அவனது பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விட, மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டுகளில் வீக்கம் உண்டானது. தொடர்ந்து அந்த வீகம் சீழ் பிடித்து புண்ணாக மாறியது.

கடல் நத்தை...
வீட்டிலேயே முதலுதவி செய்ய நினைத்த சிறுவனின் பெற்றோர், வீக்கத்தை அழுத்தி சீலை வெளியேற்றினர். அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. தானாக நகர துவங்கிய அந்தக் கல்லை உற்று நோக்கிய போது தான், அது கடல் நத்தை என்பது தெரிய வந்தது.

மீன் தொட்டியில் வாழ்கிறது...
அதிர்ந்து போன அவர்கள், பின்னர் அந்த குட்டி நத்தையை பிடித்து கழுவி தற்போது, மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனராம்.

முட்டை உடைந்து நத்தையானது...
பிராங்ளின் கீழே விழுந்த போது, புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை, சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து, நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications