For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் தொடரும் வன்முறை: 30 ஆயிரம் பேர் அகதிகளாக ஈராக்கில் தஞ்சம்!

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: சிரியாவில் தொடரும் உள்நாட்டு வன்முறை சம்பவங்களால் கடந்த சில நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் ஈராக் நாட்டுக்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது..

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா. அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் எட்வர்ட்ஸ், கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 30 ஆயிரம் சிரியா நாட்டவர் வடக்கு ஈராக்கில் எல்லை தாண்டி வந்து அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் . எல்லைப் பகுதியான சஹேலாவில் எல்லையைக் கடப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் வரிசையில் உடைமைகளுடன் காத்து நிற்கின்றனர்.

Syria violence: 30,000 refugees migrate to Iraq

ஈராக்கில் ஏற்கெனவே ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எஃப்ரின், அலெப்போ, ஹஸ்ஸாகே ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றார்.

English summary
Around 30,000 Syrian refugees have crossed over into Iraq in the last few days, marking one of the biggest influx of refugees since Syrian conflict began over two years ago, the UN’s refugee agency has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X