தமிழகத்தில் தாக்குதல் நடத்த யாழில் பாக். தீவிரவாதிகளா? இலங்கை ராணுவ தளபதி மறுப்பு!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை ராணுவத்தின் உதவியுடன் கடல்வழியாக ஊடுருவி தமிழகத்தின் மதுரை அல்லது மயிலாடுதுறையில் மும்பை பாணியிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இலங்கை முழுவதும் பாதுகாப்பு நிலையில் உள்ளது. இந்திய உளவுத் துறை கூறுவது போல எந்தத் தாக்குதலையும், எந்த ஆயுதக்குழுவும் மேற்கொள்ள முடியாது.
இலங்கைத்தீவின் எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. எந்த ஆயுதக்குழுவுமே, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு பகுதியிலும், ஒருங்கிணையவோ, பயிற்சி பெறவோ, தாக்குதல் தொடுக்கவோ முடியாது என்றார்.
இதேபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய நிராகரித்துள்ளார்.
"இந்தச் செய்திகள் நிச்சயமாக அடிப்படையற்றவை. யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு தூதரகம் உள்ளது. அங்கு எத்தகைய இரகசிய இராணுவ செயற்பாடுகளும் நடக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications