கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவல்… சென்னையில் விடிய விடிய வாகன சோதனை
சென்னை: கடல் வழியாக தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்கக்கூடும் என்று வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் விடியவிடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியே ஊடுருவி, தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி முடித்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரபி கடல் வழியாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையை எளிதில் வந்தடைய முடியும் என்று அந்த புலனாய்வு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல்வழியே வந்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளை தாக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை அல்லது மயிலாடுதுறையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு இணை இயக்குநர் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில மாதங்களில் இத்தாக்குதல் நடைபெறலாம் என்றும், இதற்காக 8 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு பாதுகாப்பு
இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க, மூன்றடுக்கு ரோந்துபணிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

விடிய விடிய சோதனை
சென்னையில் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. சந்தேகத்திற்குறிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முழுமையான விசாரணைக்கு பிறகே அனுப்பப்பட்டன.
போன்ற வாகனச் சோதனை மூன்று நாட்களுக்கு தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கண்காணிப்பு
இந்த அச்சுறுத்தலையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் பாதுகாப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், மயிலாடுதுறையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications