மணல் அள்ளும் விவகாரம்: விழுப்புரத்தில் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் பா.ம.க. ஒன்றிய செயலாளர், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பா.ம.க. ஒன்றிய செயலாளராக திருமலை வாசன் என்பவர் செயல்பட்டு வந்தார். இவருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருட்டு மணல் அள்ளுவது தொடர்பாக பல வருடங்களாக போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த திருமலை வாசன், தன் வேலையை முடித்துவிட்டு சுமார் 2 மணியளவில் வெளியே வந்து ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு திருமலை வாசனின் அண்ணன் ரவி என்பவர் ஆறுமுகம் தரப்பினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அன்று முதல் இருதரப்பினருக்கும் பகை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று திருமாலை வாசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications