உத்தரப்பிரதேசத்தில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
லக்னோ: மும்பையில் ஊடகத்துறையைச் சேர்ந்த பெண்போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் உத்தரப்பிரதேசத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் டெய்னிக் ஆஜ் நாளேட்டில் பணியாற்றி வந்தவர் 50 வயதான ராகேஷ் ஷர்மா. மூத்த பத்திரிகையாளரான அவர் நேற்று மாலை பணிமுடிந்த பின்னர் எடவா நகரில் உள்ள வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால் மீண்டும் தமது இரு சக்கர வாகனத்தில் புறப்படத் தயாராக இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதைத் தொடர்ந்து ராகேஷ் ஷர்மா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ராகேஷ் ஷர்மா ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்? அவரை சுட்டது யார்? என்பது குறித்து உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் மற்றொரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications