For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயக்குநர்கள் குடும்பத்துக்கு எஸ்ஆர்எம்மில் இலவச சிகிச்சை- கல்வி: பாரிவேந்தர் அறிவிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

SRM offers free treatment and education for film directors family
சென்னை: தமிழ் சினிமா இயக்குநர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இனி எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வி.சேகர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பி.வாசு மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பாரிவேந்தர் கூறுகையில், "திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக ரூ.30 லட்சம் மதிப்புள்ள நான்கு 5டி கேமரா வழங்குகிறோம்.

மேலும் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவசமாக உயர் அளவிலான எந்த சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் பெறலாம். இந்த இலவச மருத்துவ சிகிச்சை பத்திரிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படும்.

இயக்குனர்களின் குடும்பத்தை சேர்ந்த, தகுதியுள்ள 10 மாணவ, மாணவியருக்கு எந்த கல்வியானாலும் எஸ்.ஆர்.எம். குழுமத்தில் இலவசமாக பெறலாம். எஸ்.ஆர்.எம். சிவாஜி பிலிம் இன்ஸ்டியூட்டில் உள்ள லேப்பை இயக்குனர்கள் படப்பிடிப்பு சார்ந்த வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.

English summary
SRM Founder Parivendar announced that Tamil film directors family can avail free super special treatment at SRM Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X